ஆட்சியை தக்க வைத்தாலும் ஆம் ஆத்மியின் வாக்கு எண்ணிக்கை குறைவு

டெல்லி, பிப்ரவரி-11

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியமைக்கும் என தகவல் வெளியானது. இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இதில், ஆம் ஆதிமி கட்சியே முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி, ஆம் ஆத்மி 58 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சியமைப்பதற்கு 36 இடங்கள் போதுமான நிலையில், பெரும்பான்மையை தாண்டி ஆம் ஆத்மி முன்னிலையில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 12 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

டெல்லியில், பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி ஆட்சியை தக்க வைத்த போதிலும், ஓட்டு சதவீதம் என்பது குறைந்துள்ளது. கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி 54.3 சதவீத ஓட்டுகள் பெற்று, 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் தற்போது வரை அக்கட்சி 53.41 சதவீத ஓட்டுகள் பெற்று 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் ஓட்டு வங்கி குறைந்ததுடன், தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *