வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல், இந்தியாவுக்கு பின்னடைவு?

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடரிலிருந்து விலகுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் 2-ம் தேதி விசாகபட்டினத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து 2, 3 வது தொடர்கள் புனே மற்றும் ராஞ்சியில் நடைபெறுகிறது.

இதற்காக வழக்கமான உடல் தகுதி பரிசோதனை செய்யப்பட்டபோது, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு முதுகில் பிராக்சர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர் போட்டியிலிருந்து விலக்கி கொள்ளப்படுவதாக பி.சி.சி.ஐ. செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவு அணிகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா ஹாட்ரிக் சாதனை புரிந்தார். இந்த தொடர் உள்நாட்டு ரசிகர்கள் மத்தியில் இவர் ஆடும் முதல் தொடராக இருந்தது.

இந்த நிலையில், திடீரென காயம் காரணமாக பும்ரா விலகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பும்ராவின் இந்த விலகல் இந்தியாவுக்கு பின்னடைவாகவே பார்ப்பதாகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *