அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் 24-ந் தேதி இந்தியா வருகை: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன், பிப்ரவரி-11

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24ந்தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவரும் வருகிற 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்கின்றனர் என வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் அமையும் என்றும் அதில் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி இருவரும் தொலைபேசி வழியே பேசி கொண்டனர் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த பயணத்தில் புதுடெல்லி மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளுக்கு இருவரும் செல்கின்றனர்.  நாட்டு விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்ற வகையில் இவர்களது பயணத்தில் குஜராத் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *