கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவில் பலி எண்ணிக்கை 1,013 ஆக உயர்வு
வூகாண், பிப்ரவரி-11
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து சீனாவின் தேசிய சுகாதார அமைப்பு கூறுகையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1,013 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 24 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.
மேலும், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் சுமார் 2,097 பேருக்கு புதிதாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் நீண்ட நாட்களுக்கு பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளையும் நலம் விசாரித்தார்.
கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க சீனா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.