டெல்லி தேர்தல் நிலவரம்: பெரும்பான்மையை தாண்டி ஆம் ஆத்மி முன்னிலை

டெல்லி, பிப்ரவரி-11

டெல்லி சட்டசபை தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது.  இதனை முன்னிட்டு 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.

தேர்தலுக்கு பின் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என ஒரு தரப்பிலும், பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என அக்கட்சியினரும் கூறி வந்தனர்.  இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.  இவற்றில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்தது.

டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 36 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், ஆம் ஆத்மி கட்சி காலை 9 மணி நிலவரப்படி 52 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.  பா.ஜ.க. 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.  இதனால் ஆம் ஆத்மி 3-வது முறையாக ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *