பா.ஜ.க. பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து-ஸ்டாலின்

சென்னை, பிப்ரவரி-10

இடஒதுக்கீடு தொடர்பாக உத்தரகாண்ட் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் மாநில அரசு பணிகளில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இது மாநில அரசுகளின் விருப்ப உரிமை என்று உத்தரவிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மத்திய பா.ஜ.க அரசு பதவியேற்றதில் இருந்தே இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையில் எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல் சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்திட மத்திய பாஜக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *