மகாராஷ்டிராவில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு

நாக்பூர், பிப்ரவரி-10

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அடுத்த வர்தா மாவட்டத்தை சேர்ந்த அங்கிதா பிசுட் என்ற இளம்பெண் அங்குள்ள கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். இளம்பெண் அங்கிதாவை அதே பகுதியை சேர்ந்த விக்கேஷ் நாக்ரேல் என்பவர், தன் காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால், அங்கிதா அந்த நபரின் காதலை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த விக்கேஷ் இளம்பெண் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் தீ வைத்து எரித்துள்ளார்.

இதில், 40% தீக்காயத்துடன் தப்பித்த அங்கிதா பிசுட் நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தீ வைத்து எரிக்கப்பட்ட அங்கிதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீக்காயத்துடன் ஒரு வாரமாக உயிருக்கு போராடி வந்த இளம் பெண் உயிரிழந்துள்ளார். அங்கிதாவுக்கு தீ வைத்த விக்கேஷ் என்ற இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *