ஆஸ்கர் விருது 2020: சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார் ஜோக்கர் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ்

லாஸ் ஏஞ்செல்ஸ், பிப்ரவரி-10

ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் இந்த ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டது. ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a time in Hollywood) என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பிராட் பிட்டுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக லாரா டெர்னுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.  

சிறந்த நடிகருக்கான விருதுக்கு ஸ்பெயின் நடிகர் அன்டோனியோ பான்டராஸ் (பெயின் அண்ட் குளோரி), லியோனார்டா டிகாப்ரியோ (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்), ஆடம் டிரைவர் (மேரேஜ் ஸ்டோரி), ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்) மற்றும் ஜோனாதன் பிரைஸ் (தி டூ போப்ஸ்) ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.

இதில் ஹாலிவுட் படமான ஜோக்கர் படத்தின் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் (வயது 45) சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச் சென்றார். முதல்முறையாக ஆஸ்கர் விருதை இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *