பிகில் என்பது தமிழ் வார்த்தையே இல்லை-இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்

சென்னை, செப்டம்பர்-24

முதலில் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வையுங்கள், அப்புறம் தமிழகத்தை பற்றி கவலைப்படலாம், நடிகர் விஜயை மறைமுகமாக சாடிய இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்

ராஜா கஜினி தயாரித்து இயக்கியுள்ள உற்றான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் திங்கட்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் முதலில் தமிழில் திரைப்படத்தின் பெயரை வைத்ததிற்காக படக்குழுவினரை பாராட்டுவதாக தெரிவித்தார்.

நான் தமிழன், தமிழ்நாடு நல்லாயிருக்கனும் என வீர வசனம் பேசும் பெரிய நடிகர்கள் முதலில் தங்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இதுவரை பேசாத நடிகர்கள் எல்லோரும் அதிகம் பேச தொடங்கிவிட்டனர் என்றும், இப்படி பேசும் நடிகர்கள் முதலில் தன்னுடைய படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கூறினார்.

சினிமாவில் ஆயிரத்தட்டு வசனங்கள் பேசினாலும், மேடையில் எதார்த்தமாகதான் பேச வேண்டும் மேடையில் பஞ்ச் டய்லாக் தேவையில்லை என்றும் கூறினார். இயக்குநர் ஆர்.வி. உதயக்குமாரின் இந்த பேச்சு நடிகர் விஜய்யையும், அவர் நடித்து வெளிவரவுள்ள பிகில் திரைப்படத்தை பற்றியும் பேசியதாக சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *