பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடி மாற்றம்

சென்னை, பிப்ரவரி-06

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளராகவும் தீரஜ் குமார் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையின் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ், கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

போக்குவரத்து செயலாளராக இருந்த சந்திர மோகன் பிறப்படுத்தப்பட்டோர், எம்.பி.சி., சிறுபான்மை நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளராக தர்மேந்திர பிரதாப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளது. கைத்தறி மற்றும் ஜவுளித்துறை முதன்மை செயலாளராக இருந்த குமார் ஜெயந்த், ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் தலைவரானார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக உள்ள கார்த்திக் எரிசக்தி துறைக்கான முதன்மை செயலாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *