விஜய் வீட்டில் வருமான வரி சோதனை: அரசுக்கு சம்மந்தம் இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, பிப்ரவரி-06

விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்மந்தம் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் ஆதாரமின்றி எதுவும் சொல்லக்கூடாது. வதந்தியை பரப்பாமல் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வதந்தி பரப்புபவர்களுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பும். பாமக நூறு சதவீதம் கூட்டணியில்தான் உள்ளது. கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ராமதாஸ் அவ்வாறு பேசியிருக்கிறார். 

இது ஜனநாயக நாடு, இங்கு யாரையும் யாரும் பழிவாங்க முடியாது. வருமான வரி சோதனை நடப்பதில் அரசுக்கு சம்மந்தம் இல்லை. அவர்கள் கடமையை செய்து வருகிறார்கள். என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *