திருவண்ணாமலை அருகே அறிவியல் பூங்காவை திறந்து வைத்தார் அமைச்சர் S.P.வேலுமணி

தி.மலை, பிப்ரவரி-06

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அறிவியல் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டது. இந்த புதிய பூங்காவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முழுக்க முழுக்க பசுமை நிறைந்த இந்த அறிவியல் பூங்காவில் குழந்தைகளுக்காக நிறைய பொழுதுபோக்கு அம்சங்களும், விளையாட்டு சாதனங்களும் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *