டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் சரண்

சென்னை, பிப்ரவரி-06

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருக்கும் இடைத்தரகர் ஜெயக்குமார் போலீசில் பிடிபடாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவர் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன்(35), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜெயக்குமார் இன்று சரணடைந்தார். முக்கிய குற்றவாளியான ஜெயக்குமாரை நாளை காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கான சட்ட நடைமுறைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *