சி.ஏ.ஏ. குறித்து முழுமையாக தெரிந்துகொண்டு ரஜினி பேசவேண்டும்-ஸ்டாலின்
சென்னை, பிப்ரவரி-06
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோவளம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாணவர்கள் ஆராய்ந்து, சிந்தித்து போராட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். முதலில் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என ஆராய்ந்து, சிந்தித்து பதில் அளித்திருக்க வேண்டும். அப்படி இந்த சட்டத்திருத்தத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்தால் ஒருவேளை அவர் கூறிய கருத்தை மாற்றிக் சொல்லுவார் என நம்புகிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.