ஷாகின்பாக் போராட்டம் ஜாலியன் வாலா பாக் போன்று மாறும்-ஓவைசி

டெல்லி, பிப்ரவரி-06

ஷாகின்பாக் போராட்டம் ஜாலியன்வாலா பாக் போன்று மாறக்கூடும் என ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஷாகின்பாக் பகுதியில் கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்தநிலையில் ஷாகின்பார்க் போராட்டம் பற்றி ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

2024-ம் ஆண்டு வரை என்ஆர்சி செயல்படுத்தப்படாது என்று அரசு தெளிவான பதிலை அளிக்க வேண்டும். அவர்கள் ஏன் என்பிஆர்-க்கு 3900 கோடி ரூபாய் செலவிடுகிறார்கள்?

பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு பிறகு ஷாகின்பாக் காலி செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தெரிகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படலாம். ஷாகின்பாக் இடமானது ஜாலியன்வாலா பாக் போன்று மாறலாம். துப்பாக்கியால் சுட வேண்டும் என பாஜக அமைச்சர்களே கூறுகின்றனர். இதுபற்றி மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *