மோடி அபாயகரமான தவறை செய்துவிட்டார்-இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லமாபாத், பிப்ரவரி-06

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம் பிரதமர் மோடி அபாயகரமான தவறுகளை செய்திருக்கிறார் என இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி எப்போதுமே தனது தேர்தல் ஆதாயத்துக்காக பாகிஸ்தானை பலிகாடா ஆக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதுடன் அங்கு பல்வேறு வி‌ஷயங்களை மோடி முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் மோடி மிகப்பெரிய அபாயகரமான தவறை செய்திருக்கிறார்.

காஷ்மீர் தொடர்பாக தற்போது நடந்து வரும் சம்பவங்கள் அனைத்துக்கும் ஒரு முடிவு வரும். அப்போது காஷ்மீர் முழு சுதந்திர தேசமாக இருக்கும். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் 3 முறை தெளிவாக விளக்கி இருக்கிறேன்.

போர் ஏற்பட்டால் பாகிஸ்தானை 7 நாளில் இருந்து 10 நாட்களில் வீழ்த்திவிடுவோம் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். ஒரு சாதாரண நிலையில் இருக்கும் தலைவர்கள் யாரும் இப்படி பேசமாட்டார்கள்.

காஷ்மீர் மீது தவறான நடவடிக்கைகள் மேற்கொண்டும், அங்கு தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று தவறான தகவல்களை கூறியும் உலக நாடுகளை திசை திருப்ப இந்தியா முயற்சிக்கும். அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு இம்ரான்கான் அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *