சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மத்திய பிரதேச மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

போபால், பிப்ரவரி-05

கேரளா, பஞசாப் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து 5வது மாநிலமாக மத்தியப் பிரதேச சட்டசபையிலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. இதேபோல் தங்களது மாநில சட்டசபையிலும் தீர்மானம் கொண்டுவருவோம் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

தற்போது மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் சிஏஏ, என்.பி.ஆர். குறித்து 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த தீர்மானத்தில், சி.ஏ.ஏ.வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *