சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு!!!

லக்னோ, பிப்ரவரி-05

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சன்னி வக்பு வாரியத்துக்கு உத்தரப்பிரதேச அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்றும், அதற்கு பதிலாக சன்னி வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் 3 மாத கெடு வருகின்ற பிப்ரவரி 9-ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலத்தை உத்தரப்பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. லக்னோ நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தன்னிபுர் கிராமத்தில் இந்த 5 ஏக்கர் நிலம் உள்ளது. அயோத்தியில் இருந்து 18 கி.மீ தொலைவில் இந்த கிராமம் உள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், நிலம் ஒதுக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அரசு செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *