கைவிட்டுடாதீங்க… கண்ணீர்விட்டு கதறிய பாலிவுட் நடிகை
செப்டம்பர்-24
தன்னை கைவிட்டுவிட வேண்டாம் என கணவரிடம் கோரிக்கை வைத்து பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்

பிரபல பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தனக்கும், லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ரித்தேஷுக்கும் ஸ்டார் ஹோட்டலில் வைத்து திருமணம் நடந்ததாக ராக்கி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராக்கி சாவந்த் தற்போது அழுதபடியேயான வீடியே ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன், அதன்படியே செய்கிறேன் என்றும், என்னை விட்டு போய்டாதீங்க என்றும் ராக்கி சாவந்த் அழுதுகொண்டே பேசியது பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இது ராக்கியின் ட்ராமா என்றும், அவர் கூறுவதையெல்லாம் நம்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.