டப்பிங் யூனியன் தேர்தல்: தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்வு!!!

சென்னை, பிப்ரவரி-05

டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியின்றி தேர்வாகி உள்ளார்

டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின் சார்பில் சின்மயி போட்டியிட்டார். 

’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.  எந்த காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள் உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் சின்மயி தெரிவித்தார்.

இந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *