படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய்யை அழைத்து சென்றது வருமான வரித்துறை

நெய்வேலி, பிப்ரவரி-05

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்த விஜய்யை வருமானவரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்-க்கு சொந்தமான 20 இடங்களில் காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன் வீட்டிலும் ஐ.டி. ரெய்டு நடக்கிறது.

இந்த நிலையில் நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகளுடன் நெய்வேலிக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் சம்மன் அளித்தனர். சம்மன் கொடுத்த சிறிது நேரத்திலேயே விஜய்யிடம் அதிகாரிகள் விசாரணையும் நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பிறகு, படப்பிடிப்பில் இருந்த விஜய்யை அவரது காரிலேயே வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். இதனால், மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *