நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட முடியாது – நீதிமன்றம்

டெல்லி, பிப்ரவரி-05

நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட முடியாது என மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தது.

ஆனால், மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவை விசாரித்த பாட்டியாலா நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளை மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடையை எதிர்த்தும் குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்கக்கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் திகார் சிறைத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட தடைவித்தித்த பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.

நிர்பயா குற்றவாளிகள் தங்களுக்கு உள்ள சட்ட வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கிய நீதிமன்றம் அந்த சட்ட வாய்ப்புகளுக்கு பின்னர் குற்றவாளிகளை தூக்கிலிடும் நடைமுறைகளை சிறைத்துறை அதிகாரிகள் செயல்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *