இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது-மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி, பிப்ரவரி-05

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அரசு மாநிலங்களவையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான தேசிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கை மீது பரிசீலனை மேற்கொள்ளப்படும் என முதல்வர் பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாநிலங்களவையில் புதுச்சேரி அதிமுக எம்.பி. கோகுலகிருஷ்ணன், இலங்கை தமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பாக கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், அரசியலமைப்பு சாசனத்தின் 9-வது பிரிவின் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க இயலாது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக எந்த ஒரு ஒப்பந்தம் செய்யும் திட்டமும் மத்திய அரசுக்கு இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *