ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை: ஒரு தலித் உறுப்பினர் உட்பட 15 அறங்காவலர்கள்-அமித்ஷா

டெல்லி, பிப்ரவரி-05

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைக்கு தலித் உறுப்பினர் உள்ளிட்ட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்கையில், “அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட உள்ள ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்தா ஷேத்ரா அறக்கட்டளையில் 15 அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த 15 பேரில் ஒரு உறுப்பினர் தாழ்த்தப்பட்டோர் சமூகத்தில் இருந்து நியமிக்கப்படுவார்.

புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையிடம் 67 ஏக்கர் நிலமும் ஒப்படைக்கப்படும். ராமர் கோயில் தொடர்பான ஒவ்வொரு முடிவையும் இந்த அறக்கட்டளை சுயமாக ஆலோசித்து எடுக்கும்.

ராமர் பிறந்த இடத்தில் எழுப்பப்படும் கோயிலை காணவும், மரியாதை செலுத்தி தரிசனம் செய்யவும் ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை நிறைவேறும் என நம்புகிறேன்’’ என்று அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *