பொதுத்தேர்வு ரத்து: நடிகர் தனுஷ் வரவேற்பு

சென்னை, பிப்ரவரி-05

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு நடிகர் தனுஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கவிருந்த பொதுத்தேர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கு பலதரப்பினரும் வரவேற்பையும், ஆதரவையும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் தனுஷ் ட்விட் செய்துள்ளார். அதில், 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது. இது குழந்தைகளுக்கு மனஅழுத்தத்திலிருந்தும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலைபெறச்செய்யும். வாழ்த்துக்கள். நன்றி… என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *