விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர்!!!

கோவை, பிப்ரவரி-05

கோவையில் சாலை விபத்தில் சிக்கிய இருவரை மீட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.

கோவை போடிபாளையம் அருகே நேற்று இரவு வேகமாக வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஓன்றுடன் ஓன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் போடிபாளையத்தை சேர்ந்த பூபாலன் என்பவரும், பச்சபாளையத்தை சேர்ந்த தங்கவேலு என்பவரும் காயமடைந்து சாலையில் விழுந்து கிடந்தனர்.

அப்போது அந்த வழியாக போடிபாளையத்திலிருந்து மதுக்கரை நோக்கி வந்து கொண்டிருந்த நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விபத்து நடந்த இடத்தில் காரை விட்டு இறங்கி காயமடைந்தவர்களை மீட்டார்.

விபத்தில் சிக்கிய நபர்களை தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *