இஸ்லாமியர்களுக்காக ரஜினி குரல் கொடுப்பது நல்ல விஷயம்-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, பிப்ரவரி-05

சென்னை ராயபுரத்தில் உள்ள கே.சி.நாடார் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:

திமுக கார்பரேட் கட்சியாக மாறிவிட்டது. இனி அவர்களுக்கு திராவிட, பெரியார் கொள்கைகள் கிடையாது. டி.என். பி.எஸ்.சி., விவகாரத்தில் என் மீதும், அரசு மீதும் அவதூறுகளை திமுக பரப்புகிறது. அவர்கள் அதற்கு நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

இஸ்லாமிய சிறுபான்மையின மக்களுக்காக ரஜினி குரல் கொடுப்பது நல்ல விஷயம். இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து ரஜினி இப்போது தான் பேசுகிறார். ஆனால், அதிமுக ஏற்கனவே அந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது.

மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் 5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *