இந்திய முஸ்லீம்களுக்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன், நிற்பேன் – ரஜினிகாந்த்

சென்னை, பிப்ரவரி-05

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்னும் தமக்கு நோட்டீஸ் வரவில்லை. சம்மன் வந்தால் நேரில் ஆஜராகி விளக்கமளிப்பேன்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு அவசியம், முக்கியம், தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் வெளிநாட்டவர் யார் என்பது தெரியவரும்.

சி.ஏ.ஏ. விவகாரத்தில் அரசியல் கட்சியினர் இஸ்லாமியர்களிடயே பீதியை கிளப்புகிறார்கள். சுய லாபத்திற்காக தூண்டிவிடுகிறார்கள்.

சி.ஏ.ஏ.வால் இந்திய இஸ்லாமியர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். இந்திய முஸ்லீம்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

பிரிவினையின் போது இந்தியாவில் தங்கிய இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தினால் இந்தியர்களுக்கு பாதிபில்லை என்று தெளிவுபடுத்திவிட்டனர். ஒரு விஷயத்தை பற்றி மாணவர்கள் நன்றாக ஆராய்ந்து, சிந்தித்து போராடவேண்டும். மாணவர்கள் ஆராயாமல் போராட்டம் நடத்தினால் அரசியல் கட்சியினர் அதை தவறாக பயன்படுத்துவார்கள்.  

என்.ஆர்.சி.யை இன்னும் அமல்படுத்தவில்லை, ஆலோசித்து தான் வருகின்றனர். பல வருடங்களாக தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவேண்டும். இவ்வாறு ரஜினி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *