பொதுத்தேர்வுக்காக வசூல் செய்த தொகை திருப்பி அளிக்கப்படும்-செங்கோட்டையன்

சென்னை, பிப்ரவரி-05

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்த நிலையில், கடும் எதிர்ப்புக்கு எதிரொலியாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டார். அரசின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன்:  5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும்.

மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் எனவும் ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும் அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *