காமெடி நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம்!!!

சென்னை, பிப்ரவரி-05

காமெடி நடிகர் யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

சமீப காலமாக நகைச்சுவையில் கொடிகட்டி பறக்கிறார் யோகிபாபு. வருடத்திற்கு 15 படங்கள் வரை கமிட் ஆகி கமெடியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். யோகி பாபுவுக்கு எப்போது திருமணம் என்று அனைவரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இந்நிலையில் யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை குல தெய்வ கோயிலில் வைத்து எளிமையாக திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு யோகி பாபு கூறியிருப்பதாவது, இன்று காலை (05.02.2020) எனது குலதெய்வ கோயிலில் வைத்து மஞ்சு பார்கவிக்கும் எனக்கும் திருமணம் நடைபெற்றது என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று கூறியுள்ளார்.

யோகி பாபுவின் ட்வீட்டை பார்த்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ரஜினி கூறியபடியே யோகி பாபுவுக்கு திருமணம் நடந்துவிட்டது என்று கூறி ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *