கெஜ்ரிவால் அரசு, ஏழைகளுக்கு எதிரானது: டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

டெல்லி.பிப்ரவரி.04

கெஜ்ரிவால் அரசு, ஏழைகளுக்கு எதிரானது, அவர் வெறுப்பு அரசியல் செய்கிறார், என்று  டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி சாடியுள்ளார்.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 08 ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  பாஜக வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி துவாரகா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், டெல்லி மக்கள் பற்றிய கவலை  ஆம்ஆத்மி கட்சிக்கு இல்லை. கெஜ்ரிவால் அரசு, ஏழைகளுக்கு எதிராக செயல்படுகிறது, அவர் வெறுப்பு அரசியல் மட்டுமே செய்கிறார். பாஜக அதனை எதிர்க்கிறது என்றார்.

டெல்லி முன்னேற்றத்துக்கு தேவை வெறுப்பு அரசியல் அல்ல, வளர்ச்சிக்கான அரசியலில் பாஜக நம்பிக்கை வைத்துள்ளது. பாஜக அரசு, சுமார் 80 ஆயிரம் டில்லி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு பெற்று தந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழைககளின் மேம்பாட்டிற்காக பாஜக பாடுபடுகிறது கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் சிறப்பான ஆட்சி நடத்தி நாட்டை மாற்றியுள்ளோம், அடுத்ததாக டில்லியை மாற்றுவோம் அதற்கு பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று பிரதமர்  மோடி கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *