முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க.வால் அறிவிக்க முடியுமா? – கெஜ்ரிவால் சவால்

டெல்லி, பிப்ரவரி-04

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஆம் ஆத்மியும், தலைநகரை கைப்பற்ற பாஜகவும், காங்கிரசும் முழு முனைப்பில் களம் கண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில், முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில்,

  • பணியின் போது மரணமடையும் துப்புரவு பணியாளர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். 
  • வீடு தேடி ரேஷன் பொருட்கள், வலிமையான ஜன்லோக்பால்.
  • மூத்த குடிமக்கள் வழிபாட்டுதலங்களுக்கு செல்ல ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் கல்வி அளிக்கப்படும்.
  • ஆங்கிலம், தனிநபர் பயிற்சிக்கு சிறப்பு வகுப்புகள் துவக்கப்படும். 
  • யமுனை ஆற்றங்கரையோரம் நவீனப்படுத்தப்படும்.
  • டெல்லி நகரத்தில் கடைகள் மற்றும் உணவகங்கள் 24 மணிநேரமும் திறந்திருக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பா.ஜ.க. வால் அறிவிக்க முடியுமா? அக்க்ட்சியை சேர்ந்த யார் கூட வேண்டுமென்றாலும் விவாதத்தில் ஈடுபட தயார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர் என்பதை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். படிக்காத அல்லது தகுதியில்லாத நபரை அமித்ஷா அறிவித்தால் என்ன செய்வது? அது டெல்லி மக்களை ஏமாற்றுவது போல் ஆகும்.

நாளை (பிப்.5) பிற்பகல் 1 மணிக்குள் அக்கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிக்காவிட்டால், மீண்டும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்வேன் என்றும் பேசினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *