சீனா செல்லும் வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர தடை- மத்திய அரசு

டெல்லி, பிப்ரவரி-04

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கடந்த 2 வாரங்களில் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டு பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது.

சீனாவில் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சினாவில் மட்டும் இதுவரை கொரோனா வைர்ஸ் பாதிப்புக்குள்ளாகி 425-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளது.

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசும் இதேபோன்று முடிவு செய்துள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனாவிற்கு சென்ற வெளிநாட்டு பயணிகள் இந்தியா வருவதற்கு விசா கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், சீனர்கள், சீனா சென்ற வெளிநாட்டு பயணிகளின் வேலிட் விசா ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி முதல் டெல்லி -ஹாங்காங் இடையிலான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *