டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.22 மட்டுமே…

டெல்லி, செப்டம்பர்-24

நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வரும் நிலையில் டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய்க்கு மத்திய அரசே நேரடியாக விற்பனை செய்து வருகிறது.  இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

பெரிய வெங்காயம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதி ஆகியவற்றில் பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இங்கிருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதால், வெங்காயம் விலை திடீர் ஏற்றம் கண்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர் துறை புள்ளிவிவரங்கள்படி, சில்லறை விலையில் பெரிய வெங்காயத்தின் விலை டெல்லியில் கிலோ ரூ.80 ஆகவும், மும்பையில் ரூ.70 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.50 ஆகவும், சென்னையில் ரூ.50 முதல் ரூ.60 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசு டெல்லியில் நியாய விலைக்கடை மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலமாக வெங்காயத்தை நேரடியாக விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் 22 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கிச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *