CAA-வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம், வீதி வீதியாக சென்று கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்!!!

சென்னை, பிப்ரவரி-04

சென்னை தேனாம்பேட்டையில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.

CAA, NRC, NPR ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 2-ம் தேதி சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை தேனாம்பேட்டை பகுதியில் பொதுமக்களிடம் நேரடியாகச் சென்று குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் சிறுபான்மையினருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். இந்த நிகழ்வில் திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *