காந்தி குறித்து பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடி அதிருப்தி

டெல்லி, பிப்ரவரி-04

மகாத்மா காந்தி பற்றி கர்நாடக பா.ஜ.க. எம்.பி. அனந்தகுமார் ஹெக்டேயின் பேச்சுக்கு பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடக மாநில எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே பெங்களூருவில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில்  சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம் போட்டு கொண்டு ஒரு குழு போராடியது.

இந்த குழுவினர் நேர்மையான முறையில் சுதந்திர போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அவர்கள் ஆங்கிலேயர்களிடம் அடி உதை வாங்கவில்லை. ஆனால் அவர்கள் வரலாற்று பக்கங்களில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நமது நாட்டின் சுதந்திர போராட்டக்காரர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

அனந்தகுமார் எம்.பியின் கருத்துக்கு காங்கிரஸ் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.  இதற்கிடையே, அனந்தகுமார் மீது பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  அனந்தகுமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாஜக பாராளுமன்றக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவும் தற்காலிக தடை விதிக்கப்படலாம் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *