கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 425 ஆக உயர்வு

பெய்ஜிங், பிப்ரவரி-04

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவி வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக இதுவரை சீனாவில் 425 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 64 பேர் தற்போது இறந்துள்ளதாக ஹுபெய் மாகாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.

அதிகரிக்கும் நோய் தொற்றால் புதிதாக 2,345 பேர் பாதிகப்பட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக சீனாவில் இதுவரை சுமார் 19,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹுபெய் மாகாணத்தில் உள்ள மருத்துவ ஆணையம் கூறுகின்றது.

உலகளாவிய சுகாதாரத்தை அவசரநிலைக்கு தள்ளியுள்ள இந்த நோய் தொற்று, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹுபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹான் என்ற இடத்தில் உள்ள ஒரு சந்தையில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.

சீனா மட்டுமின்றி உலகில் உள்ள 20 நாடுகளில் பரவி உள்ள இந்த நோய்க்கு, சீனாவை தவிர பிலிப்பைன்ஸ் நாட்டிலும் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சிக்கலான சூழ்நிலையில் கையுறை, முகமூடி மற்றும் பாதுகாப்பு கண்ணாடி ஆகியவை அதிகம் தேவைப்படுவதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *