கொரோனா வைரஸ் குறித்து பாகிஸ்தான் அச்சத்தை பரப்புகிறது-சீனா குற்றச்சாட்டு

பெய்ஜிங், பிப்ரவரி-03

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சத்தை உருவாக்கவும், பரப்பும் வகையிலும் அமெரிக்கா செயல்படுகிறது என சீனா குற்றஞ்சாட்டி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் 362-க்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,300 ஆகவும் உயர்ந்து உள்ளது. 478 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுவுடன், அங்கிருந்து முதன் முதலில் தங்கள் நாட்டவரை மீட்ட நாடு அமெரிக்கா. சீனாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண அறிவுரையையும் அமெரிக்கா தான் முதன் முதலில்  வழங்கியது.

இது குறித்து பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்-யிங் கூறியதாவது: உதவியை வழங்குவதற்கு பதிலாக, சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்த அச்சத்தை பரப்பும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளை மீறி, பயணம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக அதீத கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்து வருகிறது. அமெரிக்கா தனது தூதரக ஊழியர்களை ஓரளவு திரும்ப பெற பரிந்துரைத்த முதல் நாடு, சீனப் பயணிகள் மீது பயண தடையை விதித்த முதல் நாடு ஆகும்.

இது ஒரு மோசமான எடுத்துக்காட்டு.  நியாயமான, அமைதியான மற்றும் அறிவியலை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளை மற்ற நாடுகள் எடுக்கும் என்று சீனா நம்புகிறது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *