எம்.பி.பி.எஸ். கலந்தாய்வை மீண்டும் நடத்துவது சாத்தியமில்லை

மதுரை, செப்டம்பர்-24

தமிழக மருத்துவக் கல்லூரி கலந்தாய்வில் பிற மாநில மாணவர்கள் கலந்து கொண்டதால் அதனை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களில் வெளிமாநிலத்தவர்கள் கலந்துகொளவதாக வந்த தகவலை அடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் இந்த ஆண்டு 126 வெளிமாநில மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர் என்றும் எனவே, இந்த ஆண்டிற்கான கலந்தாய்வை ரத்து செய்வதோடு, பட்டியலில் இருந்து வெளிமாநில மாணவர்களை நீக்கி, புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வெளி மாநிலத்தவர் என கூறப்படும் 126 பேரையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவர்களில் சான்றுகள், ஆவணங்கள் சரியாக இருந்த 68 பேர் வழக்கிலிருந்து நீக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் கலந்தாய்வினை முழுமையாக ரத்து செய்து புதிதாக நடத்துவது சாத்தியமானதல்ல என்றும் தேவையெனில் சான்றிதழ்களை சரிபார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *