அண்ணா நினைவு நாள்: சமபந்தி விருந்தில் மக்களோடு அமர்ந்து உணவருந்திய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை, பிப்ரவரி-03

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவு அருந்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்களில் சம்பந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்ற உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தினார்.

சமபந்தி விருந்து முடிந்ததும், பூஜைக்கு வைக்கப்பட்ட வேட்டிகள், சேலைகள், பட்டுப்புடவைகளை பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *