ஆழ்துளை கிணறு பலி: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி, பிப்ரவரி-03

ஆழ்துளை கிணறு உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம் வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளும் முற்றிலும் அகற்றப்படவேண்டும் என மாநில அரசுகளுக்கு 2010 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆனால், கடந்த வருடம் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் என்ற சிறுவன் 5 நாள் மீட்பு போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீடகப்பட்டான். இது தொடர்பாக ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாகக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல சம்பவங்கள் நடந்துள்ளது.

இனி இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி ஆழ்துளை கிணறு அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டிஸ் அனுப்பியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *