சேலம், நாமக்கல் மாவட்ட திமுக செயலாளர்கள் மாற்றம்!!!

சென்னை, பிப்ரவரி-03

திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மாவட்ட கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கட்சி அமைப்பின் நிர்வாகிகள் நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக மாவட்ட கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற, கட்சித் தேர்தல் பணிக்குழு செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த டி.எம். செல்வகணபதி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.ஆர்.என். ராஜேஷ்குமார் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

கட்சி சட்டதிட்டம் 31-ன் படி வீரபாண்டி ராஜா கட்சி தலைமைக் கழகத்தால் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்படுகிறார் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் அவர் இணைந்து பணியாற்றுவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *