கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கேரளா, பிப்ரவரி-03

கேரளாவில் ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா வைரஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

இதுதொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சகம் கூறும்போது, சீனாவுக்கு சென்று திரும்பும் அனைவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், சீனாவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியுள்ளது தெரியவந்துள்ளது. எனினும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாவும், தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் வைரஸ் அறிகுறி உள்ள 800-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்கள் மும்பை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தனி அறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

ஜனவரி 1ம் தேதி முதல் சீனாவிற்கு சென்று திரும்பியவர்கள் தங்களது உடல்நிலையில் இருமல், காய்ச்சல், சுவாசக்கோளாறு போன்ற ஏதேனும் லேசான மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக அருகில் உள்ள சுகாதார மையத்தை அணுகும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *