அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை: தேடலும் இல்லை-திமுகவை சாடிய ராமதாஸ்

சென்னை, பிப்ரவரி-03

பாமகவில் அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை, தேடலும் இல்லை என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் இணைந்து பிரசாந்த் கிஷோரின் இந்திய அரசியல் செயல்பாட்டு குழு (ஐபிஏசி) பணியாற்றும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸும் இதனை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில், “எந்தத் தேர்தலாக இருந்தாலும் பாமகவின் வெற்றியை தலைமையின் வழிகாட்டுதலும், தொண்டர்களின் உண்மையான உழைப்பும், பாட்டாளிகளின் ஆதரவும் உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மக்களிடம் செல்வோம்! அவர்களுக்காக உழைப்போம்!! அவர்களால் வெல்வோம்!!!

வெற்றிடங்களைத்தான் காற்று நிரப்பும். பாமக அறிவார்ந்த இளைஞர்களும், உண்மையான தொண்டர்களும் நிறைந்த கட்சி. பாட்டாளி மக்கள் கட்சியுடன் இரண்டறக் கலந்த இளைஞர்கள் இயக்கத்தில் நிறைந்துள்ள நிலையில், அந்நிய அறிவுக்கு தேவையும் இல்லை; தேடலும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *