சபரிமலை வழக்கு பிப்.6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி, பிப்ரவரி-03

சபரிமலை ஐயப்பன் கோயிலில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில், சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை, வருகிற 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 56 மனுக்களை அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த அமா்வில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுடன், நீதிபதிகள் ஆா்.பானுமதி, அசோக் பூஷண், எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம். சாந்தன கௌடா், எஸ்.ஏ. நஸீா், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூரியகாந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இது தவிர மசூதிகளில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரம், வேறு இன ஆண்களை திருமணம் செய்யும் பாா்சி இனப் பெண்களை அந்த இனத்தவரின் வழிபாட்டு தலத்துக்குள் அனுமதிக்க கோரும் விவகாரம் ஆகியவற்றையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையில் 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமா்வு இன்று விசாரித்தது.

விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய 9 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படவில்லை என்றும், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படவே நிர்மானிக்கப்பட்டதாகவும், தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

சீராய்வு குறித்தோ, பொதுநல பிரச்சினையாக கருதுவது பற்றியோ, பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். 5 நீதிபதிகள் அமர்வு முன்வைத்த 7 கேள்விகளை மையப்படுத்தியே விசாரிக்கப்படும் என்று கூறிய தலைமை நீதிபதி அமர்வு, விசாரணையை வருகிற 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *