நடுத்தர மக்களின் வரிச்சுமையை குறைக்கும் பட்ஜெட்-பிரதமர் மோடி

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.45 மணியளவில் நிறைவு செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரடஹ்மர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை அதிகரிக்க பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், இது சாமானியர்களுக்கான பட்ஜெட் எனவும் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

மேலும், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில் முனைவோருக்கு இந்த பட்ஜெட் உதவும். நடுத்தர மக்களுக்கு வருமான வரிச் சுமை பெரிதும் குறையும். வரி குறைப்பின் மூலம் புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அனைத்து துறைகளுக்கும் சலுகைகளை அளிக்கும் பட்ஜெட் இது. சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க பட்ஜெட் வழி ஏற்படுத்தியுள்ளது. டிவிடெண்ட் விநியோக வரி நீக்கம் நிறுவனங்களுக்கு சாதகமான நடவடிக்கை எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *