மத்திய பட்ஜெட் 2020: எந்த பொருளின் விலை குறையும்? எது அதிகரிக்கும்?

டெல்லி, பிப்ரவரி-01

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். வரி விதிப்பு மற்றும் குறைப்பில் செய்யப்படும் மாற்றங்களை பொருத்து ஒரு சில பொருட்களின் விலை குறைப்பு மற்றும் உயர்வு அமலுக்கு வரும்.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுவர் மின்விசிறி, சமையல் பாத்திரங்கள், சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பீங்கான் குவளைகள், தட்டுகள், இரும்பு, உருக்கு, காப்பர் பாத்திரங்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுவரில் பொருத்தப்படும் காற்றாடிகளுக்கான சுங்கவரி 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் சமையல் பாத்திரங்கள், சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட பீங்கான் குவளைகள், தட்டுகள், இரும்பு, உருக்கு, காப்பர் பாத்திரங்கள் ஆகியவற்றின் சுங்கவரி 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இறக்குமதி செய்யப்படும் செருப்பு வகைகள், வீட்டில் பயன்படுத்தப்படும் மரச்சாமான்கள் ஆகியவற்றின் சங்கவரியும் உயர்த்தப்பட்டுள்ளது. அதனால், காலணிகள் மற்றும் மரப்பொருட்களின் விலை அதிகரிக்கும்.

அதேசமயம் கச்சா சர்க்கரை, விலங்குகள் சாப்பிடப் பயன்படும் உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட பால், குறிப்பிட்ட மதுவகைகள், சோயா, சோயா புரோட்டின் ஆகிவற்றுக்கான சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளதால், இவற்றின் விலை குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *