மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியர்கள் கொடுக்கவேண்டும்-ஆணையர் பிரகாஷ்

சென்னை, பிப்ரவரி-01

குழந்தைகளுக்கு   பாலியல்   துன்புறுத்தல்   ஏற்படும்போது   ஆசிரியர்கள்   மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இன்னர் வீல்  கிளப்  ஆஃப்  மெட்ராஸ்  (Inner Wheel Club of Madras)  இணைந்து  நடத்திய  சென்னைப் பள்ளிகளின்  தலைமையாசிரியர்களுக்கான  பயிலரங்கம்  அம்மா  மாளிகை  அரங்கத்தில்  இன்று நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி  ஆணையர்  பிரகாஷ்,  காவல்துறை கூடுதல் டிஜிபி ரவி, புதுச்சேரி மனித உரிமை ஆணைய தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை கையாளும்  முறைகள்  குறித்தும், குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்தும்,  இந்த  வன்கொடுமையில்  ஈடுபடும்  நபர்கள்  மீது  மேற்கொள்ளப்பட்ட வேண்டிய சட்டநடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

இவ்வகையான பயிற்சி வகுப்புகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் இனி வரும் காலங்களில் நடத்தப்படும் எனவும், ஆசிரியர்கள் அனைவரும்  போக்சோ  சட்டம் குறித்த விழிப்புணர்வை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகரித்து வருவதாகவும் பள்ளி பருவத்தில் இருந்து மாணவர்களுக்கு நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியை ஆசிரியர்கள் வழங்கிட வேண்டுமென தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *