மத்திய பட்ஜெட் 2020: ரயில்வே துறைக்கான அறிவிப்புகள்

டெல்லி, பிப்ரவரி-01

மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று (பிப்.1) மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.  இது அவர் தாக்கல் செய்கிற இரண்டாவது பட்ஜெட் ஆகும். இப்போது ரயில்வே பட்ஜெட்டும் மத்திய பட்ஜெட்டுடன் இணைத்தே தாக்கல் செய்யப்படுகிறது.

  • இந்திய ரயில்வே இப்போது உணவு விநியோகத்தில் இன்னும் அதிக பங்கு வகிக்கும். விவசாயிகளின் விளை பொருட்களை கொண்டு செல்ல உருவாக்கப்படும் ரயில் குளிர்பதன வசதி கொண்டதாக இருக்கும்.
  • மத்திய அரசு கொண்டு வரவுள்ள இந்த திட்டத்தின் மூலம், பழங்கள், பால் பொருட்கள், மீன், இறைச்சி போன்றவற்றை குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டு நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
  • சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காகவும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் சுற்றுலா தளங்களை இணைக்கும் வகையில் அதிகளவில் தேஜஸ் ரயில்கள் இயக்கப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள ஆயிரம் ரயில் நிலையங்களில் வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.
  • பெங்களூரு நகரில் தனியாருடன் இணைந்து சுமார் ரூ.18, 000 கோடி செலவில் புறநகர் ரயில் வசதி எற்படுத்தி தரப்படும்.
  • நாடு முழுவதும் 11,000 கி.மீ. ரயில்பாதைகள் மின் மயமாக்கப்படும்.
  • டெல்லி மும்பை அதிவிரைவு சாலைப்பணியை 2023-க்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மும்பை-அகமதாபாத் இடையே அமைக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் திட்ட பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படும்.
  • நாடு முழுவதும் உள்ள ரயில்வே வழித்தடங்கள், ரயில் நிலையங்களில் சோலார் வசதி செய்து தரப்படும்.
  • ரயில்வேயில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் 150 தனியார் ரயில்களை இயக்க வழிவகை செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *