மத்திய பட்ஜெட் 2020: எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? யாருக்கு அதிகம்?

டெல்லி, பிப்ரவரி-01

2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.  கடந்த ஆண்டு மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மக்களவையில் காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.40 மணியளவில் நிறைவு செய்தார்.

பட்ஜெட்டின் மூன்று முக்கிய நோக்கம்:

  • எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல்
  • பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
  • சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல்

எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

வேளாண் மற்றும் நீர் பாசன துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

தூய்மை இந்தியா திட்டத்தற்கு ரூ.12,300 கோடி ஒதுக்கீடு

ஜல் ஜீவன் திட்டத்திற்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு

2020-2021 நிதி ஆண்டில் ரூ.99,300 கோடி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு

திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு

தேசிய ஜவுளித் திட்டத்திற்கு ரூ.1480 கோடி ஒதுக்கீடு

வர்த்தம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.27,300 கோடி ஒதுக்கீடு

அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த, உருவாக்க ரூ.103 லட்சம் கோடி ஒதுக்கீடு

போக்குவரத்து கட்டமைப்புகளுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கீடு

குவாண்டம் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.8,000 கோடி ஒதுக்கீடு

அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

தேசிய ஊட்டச்சத்து திட்டத்திற்கு ரூ.35,600 கோடி ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.85 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பெண்கள் தொடர்புடைய திட்டங்களுக்கு ரூ.28,600 கோடி ஒதுக்கீடு

பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு மட்டும் ரூ.53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கலாச்சாரத்துறைக்கு ரூ.3,150 கோடி ஒதுக்கீடு

சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு

சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.

பெங்களூரு புறநகர் போக்குவரத்து திட்டத்திற்கு ரூ.18, 600 கோடி ஒதுக்கீடு

மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு

பாரத் நெட் திட்டத்திற்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக ரூ.9,500 கோடி ஒதுக்கீடு

சுகாதாரத்துறைக்கு ரூ.69,000 கோடி ஒதுக்கீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *